உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்98432030d286778704074cb72907cc9a-285x150சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகிவிட்டு திரும்பிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், சிவகாசி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பண மோசடி வழக்கில் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று ஒரு வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன்பின்னர் நீதிமன்றத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலேயே காத்திருந்த சிவகாசி போலீசார், மோசடி ஆவணம் வழக்கு தொடர்பாக அவரை கைது செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த ஒரு பிரமுகரிடம் பவர்ஸ்டார் பணமோசடி செய்ததாக கூறப்பட்ட ஒரு புகாருக்காக அவரை விசாரணை செய்ய சிவகாசி போலீஸார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இவர் மீது இன்னும் அடுக்கடுக்காக புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துகொண்டிருப்பதால் இவருடைய ஜாமினை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்