உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம்.

“ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “ஸ்டெம்செல்”கள் உடலின் “மாஸ்டர் செல்” ஆக திகழ்கிறது. அவற்றை ஆய்வகத்தில் வைத்து திறமையுடன் கையாண்டு அதை மனித உடலில் ரத்தம், எலும்பு மற்றும் உடல் உறுப்புகளின் எந்த திசுக்களிலும் வளர்க்க முடியும். அதன் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விலங்குகளில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து அதன் மூலம் தலை முடி வேர்களை உருவாக்கி முடிவளர செய்துள்ளனர். இதேபோன்று, மனித உடலின் “ஸ்டெம் செல்”களில் இருந்து தலைமுடி வேர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதை இன்னும் ஓராண்டுக்குள் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமுடி வேரை இன்னும் 5 ஆண்டுக்குள் வழுக்கை தலையில் நடவு செய்து முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானி லாவுஸ்டர் தெரிவித்துள்ளார். எனவே, வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை அடைய தேவையில்லை. முடியை வளர வைக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தயாராகி வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்