உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பதவிக்குப் பின் யாழ்ப்பாணத்தில் முதல் சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்ஷேல் ஜே. சீசன் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கோயில் வீதியில் உள்ள முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வடக்கின் தற்போதைய நிலவரம், மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் தொடர்பிலும் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்