தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledவடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார்.

“போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்” என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும், காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போர் முடிவடைந்து நான்கு வருடங்களைக் கடந்தும் வடக்கில் இராணுவ அதிகாரியொருவரே ஆளுநராகக் காணப்படுகின்றமைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வினவிய போதே அமைச்சர் திஸ்ஸ வித்தாரண மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவித்த தாவது

“வடக்கில் தற்போது யுத்தம் முடிவடைந்து மக்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இராணுவ அதிகாரியொருவர் ஆளுநராக இருக்கின்றமையானது உண்மையில் அங்குள்ள தமிழர்களின் சுதந்திரத்தை பாதிக்கின்றது என்றே கூறவேண்டும்.

அதுமட்டு மல்ல, வடக்கில் தற்போது இராணுவ அதிகாரியயாருவர் ஆளுநராக இருப்பது அவசியமே இல்லாத ஒன்றாகும். எம்மைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு நிச்சயமாக ஆதரவை தெரிவிப்போம்.

கூட்டமைப்பு கூறுவதைப் போன்று வடக்கில் ஒரு சிவில் அதிகாரியொருவரை ஆளுநராக நியமித்தால் அது அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதியும், சுதந்திரத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களின் வேண்டுகோள் நியாயமானது.

ஆனால், இந்த மாற்றம் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ­வே தீர்மானம் எடுக்க வேண்டும். அவருக்குத் தான் இவ்விடயத்தை தீர்த்து வைக்க பூரண அதிகாரம் காணப்படுகிறது.

அத்தோடு வடக்கில் அகதி முகாம்களில் வாழுகின்ற தமிழர்களை மீட்டெடுத்து அவர்களின் சொந்த வீடுகளிலேயே குடியமர்த்த வேண்டும். இதற்காக இராணுவத்தின் வசம் காணப்படும் தமிழர்களின் வீடுகளும், காணிகளும் மீண்டும் மக்களுக்கே கையளிக்கப் படவேண்டும்.

தேசியப் பாதுகாப்புக் கருதி பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் சம்மந்தமாக இராணுவ உயர் பீடமே தீர்மானிக்க வேண்டும் என்றாலும் தேவைக்கதிகமாக இராணுவத்தின் வசமுள்ள காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு கையளிப்பதே ஆரோக்கியமான விடயமாகும்.” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்