உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledயாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் யாழ். பல்கலை. மாணவர்கள் ஆறு பேர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் மதுபோதையில் முதலாம் வருட மாணவர்களின் விடுதிக்குள் புகுந்து பகிடிவதை மேற்கொள்ள முற்பட்ட போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்