உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesCAGM05J285 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க துண்டுகள் 17 மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் இந்திய பிரஜைகள் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தங்க துண்டுகளை மர்மப்பகுதியில் மறைத்து ஒட்டிக்கொண்டு குதத்தில் வைத்துக்கொண்டும் சிங்கப்பூருக்கு செல்வதற்கு தயாரான இருவரையே இன்று அதிகாலை தாம் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் சென்னையை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்றும் நேற்றிரவு 10.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்த அவர்கள் இருவரும் விமான நிலையத்திலிருந்து வெளியேறாமல் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் வைத்தே அவ்விருவருக்கும் தங்கம் பரிமாறப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற அதிகாரிகள் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்