Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



66பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் வைபவ ரீதியாக ஆரம்பமாகியுள்ளது.பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் தலைமையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.கோலாகலமாக ஆரம்பித்துள்ள இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுகளில் பொதுநலவாய அமைப்பின் 53 அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தற்போதைய தலைவரான அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டிடம் இருந்து, அடுத்துவரும் 2 வருடங்களுக்கான தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கையில் இம்முறை இடம்பெறுகின்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு, 24 வருடங்களுக்குப் பின்னர் ஆசிய நாடொன்றில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்படவுள்ளதுடன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் குறித்த இறுதி அறிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்