உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஎனது அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனது அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. இந்த அரசாங்கம் எப்படி செயற்பட வேண்டும் என்று நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் அது என்னைத் தாக்கும். என்னைத் தண்டிக்கும்.ஏனெனில், அவர்கள் எவரது கருத்துகளையும் கேட்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன், எனது ஆட்சிக்காலத்தில், கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறுவு குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டது.நாம் உடனடியாக, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். 10,12 படையினர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், நீதீமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இந்த அரசாங்கம் 25 சதவீதமான போரை மட்டுமே முடிவுக்கு கொண்டு வந்தது. நான் பதவிக்கு வந்தபோது, வடக்கில் 90 வீதமான நிலப்பரப்பு விடுதலைப் புலிகளிடம் இருந்தது. எனது பதவிக்காலத்தில் 75 வீதமான பகுதியை நாம் மீளக் கைப்பற்றினோம். இந்த அரசாங்கம் 25 வீதமான போரையே முடிவுக்கு கொண்டு வந்தது. நான் இந்த அரசாங்கத்தின் ஆலோசகர் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்