உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


mikhail_kalashnikov_001AK-47 ஆயுதத்தை உருவாக்கிய (Mikhail Kalashnikov) மிக்கையல் கலஸ்நிக்கோவ் ரஷ்யாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உட்முரிட்ரியா மாகாணத்திலுள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் இருதய சிகிச்சை பிரிவில் இரண்டு வாரங்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக 94 வயதான கலஸ்நிக்கோவ் மொஸ்கோவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் பிரபலமான ஆயுதமாக காணப்படும் AK-47, ஏறத்தாழ 100 மில்லியன் வரை உலகளாவிய ரீதியில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலாவது AK-47 ஆயுதத் தொழிற்சாலையின் சிரேஷ்ட உருவாக்குநராக 80 வயது வரை அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்