உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு பட்டிப்பளையில் அமைந்துள்ள மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு சென்ற பௌத்த பிக்கு அலுவலகத்தை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச செயலகத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர், பிரதேச செயலாளரின் அலுவலக அறைக்குள் அத்துமீறி பிரவேசித்து அங்கிருந்த கணிணி இயந்திரம் உட்பட அனைத்து மின் உபகரணங்களையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கினறன.

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிக்குவின் அட்டகாசம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பொதுநிர்வாக மாகாணசபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் அபயகோண் ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதன் அடிப்படையில், அமைச்சர் குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்