உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesUMHARN1Yஇலங்கையில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.

நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில், தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது, அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்படாவிட்டால், நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கோருவோம் என்று தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில், மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர்–சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால்தான், அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்