உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி அரசையும், படையினரையும் ஆத்திரமூட்டும் – வெறுப்பூட்டும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

போருக்குப் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகளை வேண்டுமென்றே சதி செய்து குழப்புவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்னர் வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்று வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிவருடிகளின் கட்டளைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 4 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை.

இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனி ஈழ வேலைத் திட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வந்தது.

அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை நினைவு கூருவதற்கு அமெரிக்கா அனுமதிக்குமா? – என் றார் பாதுகாப்புச் செயலர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்