உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பசிபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் தெற்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் சிசி தீவுக்கு தென் கடலோரப் பகுதிக்கு 130 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் உறுதி செய்தது.
கடல் அலைகளில் எந்தவித மாற்றமும் இதுவரை தெரியவில்லை. எனினும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்