உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஇலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷாதேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு வடபகுதிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது என்று அறியமுடிகின்றது.அத்துடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரும் ஜெனிவா குழுத்தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடனும் குறித்த குழு பேச்சு நடத்தவுள்ளது.

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணத்தை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சும் நேற்று “உதயனி’டம் உறுதிப்படுத்தின.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர், நிஷாதேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு ஜனவரியில் என்ன நாளில் இலங்கை வருகின்றது? யார், யாரை அந்தக்குழு இங்கு சந்திக்கும்? வடபகுதிக்குச் செல்லுமா என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் “உதயன்’ வினவியபோது,

 

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி அரசு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று ஜே.வி.பி.வலியுறுத்தியுள்ளது.

மன்னார் போர் நடைபெற்ற பகுதி என்பதால் இது தொடர்பில் உண்மையைக் கண்டறிவது மிக அவசியம் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க  உதயனுக்குத் தெரிவித்தார்.

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அதேவேளை, மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பிலும் இன்னும் விசாரணைகள் முடிவடையவில்லை. இந்நிலையில், மன்னாரிலும் இன்னுமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்