தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledஇந்திய மீனவர்கள் 38 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார். இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 06 படகுகளில் வந்த 38 இந்திய மீனவர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்