உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesDXDIDLZ4ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரான  மல்லாகத்தைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகரன்  23 வயது மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த பொலிஸார் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.இது தொடர்பாக குறித்த பொலிஸார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், அவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தியதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நேற்று புதன்கிழமை தனது வீட்டிற்கு அருகாமையிலிருக்கும் கடையொன்றில் தனது நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், அப்பகுதியில் இருந்த சில இனம்தெரியாத நபர்கள் இவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்