தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அழகிய தமிழ் மகன் படத்தின் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த விஜய், தற்போது மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் விஜய் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்