உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஇந்தோனேசியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட ஜாவா தீவில் கெலுட் என்ற எரிமலை வெடிதிருப்பதை அடுத்து அத்தீவில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.எரிமலையிலிருந்து 500 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கக்கூடிய நகரங்கள் கிராமங்கள் வரை எரிமலைச் சாம்பல் பரவியுள்ளது.புகை மண்டலமாக சாம்பல் பரவி பார்வையை மறைப்பதால் பல்வேறு விமான நிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.ஊரையே மூடியுள்ளது எரிமலைச் சாம்பல் ஊரையே மூடியுள்ளது எரிமலைச் சாம்பல்நிறைய விமானங்கள் மற்ற மற்ற இடங்களுக்கு திசைதிருப்பப்பட்டுள்ளன.அதிக எடைகொண்ட எரிமலைச் சிதறல்கள் வந்து விழுந்ததில் வீடுகள் இடிய இருவேறு இடங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கெலுட் எரிமலை இதற்கு முன்னர் பெரிய அளவில் வெடித்தது 1568ஆம் ஆண்டில், அந்நேரம் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்