தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledஇலங்கைப் பேராசிரியரான ரொஹான் குணரட்னவை நட்ட ஈடு செலுத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்னவிற்கு எதிராக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இலங்கை பத்திரிகையொன்றில் பிரசூரமான கட்டுரையில், கனேடிய தமிழ் காங்கிரஸிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக குணரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நட்ட ஈடாக 53000 டொலர்களை குணரட்ன செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட போரின் போது 1400 பேரே கொல்லப்பட்டதாகவும் கனேடிய தமிழ் காங்கிரஸிற்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குணரட்ன கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஒன்டாரியோ நீதவான் Stephen E. Firestone இனால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் குற்றச்சாட்டுக்கள் தெளிவாகவே கனேடிய தமிழ் காங்கிரஸிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்