உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ராஜீவ் கொலை வழக்கில், 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீது வரும் 27-ஆம் திகதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சதித் திட்டம் தீட்டியவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என கூடுதல் சோலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா வாதிட்டார். இதனையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர், சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மீதமுள்ள நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வரும் 27-ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்