உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்imagesIEW222D6தமிழகத்தில் சில தசாப்தகாலமாக அகதி முகாம்களில் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்த படி பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தபடி அகதிகள் என்ற பெயரில் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்பு நிலமையினை தோற்றுவிக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம் என வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி தெரிவித்துள்ளார்.சென்ற வாரம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் முழுமையான விடுதலைக்கு உதவிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் திருமதி அனந்தி சசிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.அண்மையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலகம் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதே சமயம் தமிழகத்தில் சில தசாப்தகாலமாக அகதி முகாம்களில் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்த படி பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தபடி அகதிகள் என்ற பெயரில் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்பு நிலமையினை தோற்றுவிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்ல சிங்கள அரசின் அளப்பரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உயிர் பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்துவந்தவர்கள். கடந்த நான்கு தசாப்தங்களில் அவர்கள் வசதிகளற்ற அகதி முகாம்களிலும் சிறப்புமுகாம் என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் இரகசியமானதல்ல. அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்த மண்ணிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கை வாழும் எதிர்காலம்  நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அங்குள்ளவர்களின் துன்ப துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும். இந்த நிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும் வரை அவர்கள் குறைந்த பட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழக அரசினதும் முதல்வராகிய உங்களதும்மனிதநேய கடமையாகும் என எண்ணுகிறோம்.எனவே மரணதண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்