உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


fingerprintஇலத்திரனியல் கைரேகை அடையாள முறைமை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களை இலகுவில் அடையாளம் காணும் முகமாக இந்த கைரேகை அடையாள அட்டை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சந்தேக நபர்களின் கை ரேகைகளை அடையாளம் காண்பதற்கு சுமார் இரண்டு வாரங்கள் ஆனதாகவும் இப் புதிய முறையின் மூலம் மூன்று விநாடிகளில் கைரேகைகளை அடையாளம் காண முடியும் எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது இலத்திரனியில் ரதியில் கை ரேகைகளை அடையாளம் காணும் முறைமை இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அண்மையில் அறிவித்திருந்தது. இலங்கையில் உள்ள சகல நபர்களின் கைரேகைளையும் விபரங்களையும் கணனிமயப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்