உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesP6DITBS6மூன்று கோடி ரூபா பெறுதியான 9.5 கிலோகிராம் தங்கம் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 04 இலங்கையர்கள் உட்பட சுமார்  16 பேரை  சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (04) கைதுசெய்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.  மேற்படி தங்கமானது டுபாய், சிங்கப்பூர், மஸ்கட் மற்றும் கொழும்பிலிருந்து வந்த பயணிகளிடம்  கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாயிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 1.8 கிலோகிராம் தங்கத்தை கடத்தியதாகக் கூறப்படும் மூவரையும்; பயணப் பைகளில் 800 கிராம் தங்கத்தை மறைத்துவைத்த கேரளாவைச் சேர்ந்த 05 பேரையும் 800 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்துவைத்திருந்த கொழும்பைச் சேர்ந்த 04 இலங்கையர்களையும் இந்தியர் ஒருவரையும் கைதுசெய்ததாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் தண்டம் அறவிட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்