உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்1541634332Untitled-1இந்திய மற்றும் இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயார சவுந்திரநாயகம் அந்தோணியார் ஆலய கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து திருப்பலி பூஜைகள் நடைபெறவுள்ளன. நாளை 16 காலையில் திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நெடுந்தீவு பாதிரியார் அமல் ராஜ் தலைமையில் நடந்து வருகின்றன. இவ் விழாவில் பங்கேற்பதற்காக இராமேசுவரத்தில் இருந்து 3,460 பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் 3,432 பேர்களுக்கு மட்டுமே தமிழக வருவாய்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று காலை கச்சத்தீவு செல்ல இராமேசுவரம் துறைமுகத்தில் விண்ணப்பித்து இருந்த 3,432 பேர் குவிந்தனர். பின்னர் அவர்கள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். இவர்களை 6 இந்திய கடலோர காவல் படை படகுகள் மூலம் இந்திய கடல் எல்லையில் கொண்டு போய் விடப்பட்டு, பின்னர் விழா முடியும் போது அதே இந்திய எல்லையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்