உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்fishermen_meet_chennaiஇலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 13ஆம் திகதி நடத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை, தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் பிற்போடப்பட்டது.எனினும் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையை எதிர்வரும் 25ம் திகதி மீண்டும் நடத்த தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 39 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளன இதேவேளை, தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.அதன்படி இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களை குழப்பும் வகையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் என்றும் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில் இலங்கையின் கடற்பகுதியில் அத்துமீறும் எவரையும் இலங்கை கடற்படை கைதுசெய்யும். எனவே தமிழக மீனவர்கள் இந்த காலத்தில் தமது அத்துமீறல்களை கைவிட வேண்டும் என்று இலங்கையின் கடற்றொழில் அமைச்சு கோரியுள்ளது. ஏற்கனவே கடந்த 13 ஆம் திகதி இரண்டு தரப்புக்கும் இடையில பேச்சு நடைபெறவிருந்தது.எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிபந்தனை விதித்தமையை அடுத்து பேச்சுவார்த்தை 25 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. அதேநேரம் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்று இலங்கை அரசாங்கமும் 172 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்