Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ராஜா ராணியின் எக்குதப்பான வெற்றி அட்லீலை முன்னணி இயக்குனராக்கியது. சென்ற வாரம் வெளியான ராஜா ராணியின் தெலுங்கு டப்பிங்கும் ஹிட். அடுத்து அட்லீ யாரை இயக்குவார் என்று ஒரு சின்ன எதிர்பார்ப்பு.

அட்லீயின் முதல் தேர்வு, விஜய். ஏற்கனவே விஜய்யை சந்தித்தவர் அவருக்காக ஒரு கதையை தயார் செய்து வருகிறார். விஜய்யின் சம்மதமும், கால்ஷீட்டும் கிடைக்காவிட்டால் மட்டுமே வேறு நடிகர்களை முயற்சி செய்யவிருக்கிறார்.

அதையடுத்து இந்தியில் ராஜா ராணியை ரீமேக் செய்யும் திட்டமும் அட்லீக்கு இருக்கிறது. படத்தின் வெற்றியின் காரணமாக ராஜா ராணியை இந்தியில் ரீமேக் செய்ய பலரும் விருப்பம் தெரிவித்தனர். அட்லீக்கு வெற்றி பெறும் ஸ்கிரிப்டை நாமே ஏன் ரீமேக் செய்யக் கூடாது என்று எண்ணம். தமிழ்ப் படம் முடிந்த பிறகு இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்