உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesRF7ENL8Eதாவடிப்பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே சென்றுகொண்டிருந்த ஹையஸ் வானுடன் மோதி நிலைகுலைந்து எதிரே வந்த பிக்கப்புடன் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கந்தரோடை பகுதியைச் சேர்ந்த தர்மிகா மற்றும் அவரது கணவர் படுகாயம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தர்மிகா மயக்கமடைந்திருப்பதாகவும் கணவரின் கை மற்றும் கால் பகுதி சிதைவடைந்துகாணப்படுவதாகவும்,  அவருடைய உடற்பாகங்கள் செயற்படுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்