உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளை பாதிக்காது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளாது.இலங்கைக்கும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு பரிமாற்றங்கள் பல வருடங்களாக இருந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சித் திட்டங்கள் அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படவில்லை. இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து வழங்கும் 24வது பாதுகாப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் கொழும்பில் தற்போது நடந்து வருகிறது எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். அதேவேளை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டதன் காரணமாகவே பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார். இந்த அமைப்புகள் மேற்கொண்டு வந்த சில நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகள் காரணமாகவே அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு நலன் கருதியே மேற்படி 16 அமைப்பகள் தடை செய்யப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளரும் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்