உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesK9C6SY1Fபாகிஸ்தான் பிரஜை ஒருவர் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வந்த குறித்த நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடம் இருந்து 300 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் பயணப் பைக்குள் இருந்து 100 கிராம் ஹெரோயின் பைக்கற்கள் இரண்டும் பாதணிக்குள் இருந்து 100 கிராம் ஹெரோயின் பைக்கற் ஒன்றும் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்