உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesT8Y1MPHP வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் திகதிகள் தீர்மானிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள தேர்தல்விதிகளின் படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறைப்படி நடத்தப்பட வேண்டும். எனினும் இதற்கு இன்னும் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் நிறைவடைந்துள்ள போதும், அவற்றுக்கான தேர்தல்கள் நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 உள்ளூராட்சி சபைகளுக்கும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்