உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்imagesK9C6SY1Fபாகிஸ்தான் – இலங்கை ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஹெரோயின் போதைப் பொருளை இலங்கையில் விநியோகம் செய்யும் பிரதானியாக குறித்த நபர் செயற்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒகஸ்டின் ஜேசுதாசன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தொடர்புகளைப் பேணிய வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்கந்தராஜா என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் நாட்டை விட்டு தப்பியோடியுள்ள வெலாசுதா மற்றும் பாகிஸ்தான் போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.நீர் இறைக்கும் மோட்டார்களுக்குள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.பிரதான சந்தேக நபர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபரின் வீட்டு நிகழ்வுகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டமைக்கான புகைப்பட ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.பிரதான சந்தேக நபர், தற்போது சேவையில் உள்ள மிக முக்கியமான பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகளைப் பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபருக்கு கம்பஹா மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் காணிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறெனினும் குறித்த சந்தேக நபர்கள் எப்போது, எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்