உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிலுவை-2வட கிழக்கு சிரியாவிலுள்ள தீவிரவாதிகள் தமது குழு உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக இரு கிளர்ச்சியாளர்களுக்கு பகிரங்கமாக சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எல். என்ற மேற்படி தீவிரவாத குழு கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ரக்கா நகரிலுள்ள இயுபரேடர்ஸ் பள்ளத்தாக்கில் தமது உறுப்பினர்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய 7 பேருக்கு தாம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.10 நாட்களுக்கு முன் நயிம் சுற்றுவட்டத்தின் பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் நடத்திய கைக்குண்டுத்தாக்குதலொன்றில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் ஒருவர் கால்களை இழந்துள்ளார் என மேற்படி குழுவால் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம் வட சிரியாவிலுள்ள ரக்கா நகரில் பகிரங்கமாக சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இரு கிளர்ச்சியாளர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவரது சடலங்களை சுற்றி இந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக போராடியதுடன் இந்த இடத்தில் கைக்குண்டொன்றையும் வீசியுள்ளார் என்ற வாசகம் எழுதப்பட்ட துணி சுற்றப்பட்டிருந்தது.மேற்படி கிளர்ச்சியாளர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்