உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் நேற்றுக் காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். திருநகரினைச் சேர்ந்த மாணிக்கதியாகராஜா விஜயயாதவன் (12) என்ற சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் வியாபார நிலையமொன்றில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். சென்ற வீதியில் கிடந்த உருண்டை வடிவிலான இனம் தெரியாத மூன்று பொருட்களை கண்டெடுத்துள்ளார். அந்த மூன்று பொருட்களில் இரண்டை தனது காற்சட்டை பைகளில் வைத்ததுடன், மிகுதி ஒன்றினை கையில் வைத்து எறிந்து விளையாடியுள்ளான். இதன்போது, எறிந்த குறித்த பொருள் பெரும் சத்தத்துடன் வெடித்ததாகவும் இதனால் சிறுவன் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்