உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்explosion_oiltank_002ஜப்பான் நாட்டை சேர்ந்த கப்பல் அந்நாட்டின் தென் மேற்கு கடற்கரையில் வெடித்து சிதறியுள்ளது.ஜப்பான் நாட்டை சேர்ந்த சோகோ மரு என்ற எண்ணெய் சரக்கு கப்பல் அமாஜி துறைமுகத்தின் அருகில் வெடித்து சிதறியுள்ளது. இதில் கப்பலில் பயணம் செய்த 8 நபர்களில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் கப்பலின் கேப்டன் காணாமல் போயுள்ளார் என தெரியவந்துள்ளது.998 டன் எடையுள்ள இந்த கப்பலில் எந்தவித எண்ணெய் சரக்குகளும் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. கப்பலின் மாலுமி ஒருவர் தளத்தின் பெயிண்டை சானை மூலம் நீக்கிகொண்டிருக்கும் போது தீப்பொறி ஏற்பட்டு இந்த சம்பவம் நேர்ந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவருமே ஜப்பானியர்கள் என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்