தமிழில் எழுத
பிரிவுகள்


dosa

லண்டன் வெம்பிளி பகுதியில் இருக்கும் “சென்னை தோசா” ஹோட்டலில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இலங்கைத் தமிழர்களும், இந்தியர்களும் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று வெம்பிளி. அங்கு சென்னை தோசா (தோசை) என்ற ஹோட்டல் மிகவும் பிரபலம்.

கிழக்கு லண்டன் மனோ பாக்கில் 2003 ம் ஆண்டு முதல் கிளையை தொடங்கியது சென்னை தோசா.

அதன் பின்னர் லண்டனின் 7 கிளைகளையும் ஐரோப்பா முழுவதும் பல கிளைகளையும் உருவாக்கி இயங்கி வருகிறது சென்னை தோசா.

இந்நிலையில் “சென்னை தோசா” ஹோட்டலில் கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அங்கு ஏராளமான கரப்பான் பூச்சிகள் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்தை ஒழுங்காக கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி வெம்பிளி பகுதி சென்னை தோசா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அபாராத தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்