தமிழில் எழுத
பிரிவுகள்


13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான நிலைப்பாடு இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியிடம் 13ம் திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இது குறித்து பாராளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை பகிர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் ஆழமாக ஆராயப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என்பதனை மோடிக்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக காத்திரமான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்