உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிறிஸ்மஸ் தீவு பகுதியை 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் சென்றடைந்திருந்தனர்.சிட்னி உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது உயர் நீதிமன்ற நீதவான் சுசான் கிரினானன் (ளுரளயn ஊசநnயெn) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.புகலிடக் கோரிக்கையாளர்களில் 45 பேரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய 105 புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.இந்த இடைக்கால தடையுத்தரவு நாளை மாலை 4.00 மணி வரையில் மட்டுமே அமுலில் இருக்கும் என நீதவான் தெரிவித்துள்ளார்.இந்த மனு நாளைய தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்களை ஆபத்தில் விடக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்