உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மெக்சிகோவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் எல்லைப்பகுதியிலுள்ள சான்மார்கோஸ் நகரில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மூவர் உரியிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது கவுதமாலா நாட்டின் மேற்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.அதிகாலை சரியாக 6.23 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு 48 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்