Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் இலங்கையில் இலத்திரனியல் கடவுச் சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடவுச் சீட்டு மோசடிகளை தடுக்கும் நோக்கில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெற்றிக் முறைமையிலான கடவுச்சீட்டுக்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,

சட்டவிரோத குடியேறிகள் கடவுச்சீட்டுக்களை மோசடி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்க உள்ளது.இதற்கு மேலதிகமாக திறைசேரியிலிருந்து 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இ;ந்தக் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட உள்ளது.நபர்களின் கைவிரல் அடையாளங்களுடன் பயோமெற்றிக் முறையிலான இந்தக் கடவுச்சீட்டு உருவாக்கப்பட உள்ளது.அடுத்த ஆண்டளவில் பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் இலங்கையின் தற்போதைய கடவுச் சீட்டின் பாதுகாப்பு தொடர்பில் நல் அபிப்பிராயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்