உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


தென்னாபிரிக்காவுக்கோ அல்லது இலங்கைக்கோ எரிபொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை என்று ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனம் அறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.
அதில், உத்தியோகபற்றற்ற வகையில் சில பிரசுரங்களில் தமது நிறுவனம் இலங்கைக்கும்

தென்னாபிரிக்காவுக்கும் எரிபொருட்களை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் ஒரே கப்பலிலேயே எரிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
எனினும் ஜெனீவா அணு உடன்படிக்கையின்பின்னர் அது இடம்பெறவில்லை என்று ஈரானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் எரிபொருட்களை அனுப்புவதில் தமது நிறுவனத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்