உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு அட்டூழியங்களை செய்து வருகின்றனர்.இஸ்லாமிய ஜிஹாதிகள் என தம்மை பிரகடனப்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு கிறிஸ்தவ மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளர்.பல இடங்களில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய தீவிரவாதிகள், அப்பகுதியில் வசித்த கிறிஸ்தவர்களையும் ஊரை விட்டு வெளியேற்றியுள்ளனர்.அத்துடன் அங்கு வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்துக் கொண்டுள்ளனர்.தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.இவர்களின் அச்சுறுத்தலையடுத்து, குர்திஷ் மற்றும் யாஸிதி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 20 ஆயிரம் மக்கள், நகரை விட்டு வெளியேறி  மலை உச்சிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் அவர்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த சுமார் 500 பேரை இவர்கள் கொன்றும், சிலரை உயிருடனும் புதைத்துள்ளனர் என ஈராக்கின் மனித உரிமை துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.சிஞ்சார் பகுதியில் மதம் மாற மறுத்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தலையில் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், சிலரை அவர்கள் உயிருடன் புதைத்ததாகவும், யாஸிதி இனத்தைச் சேர்ந்த சுமார் 200 இளம்பெண்களை அவர்கள் அடிமைகளாக பிடித்து சென்று விட்டதாகவும் ஈராக்கின் மனித உரிமை துறை அமைச்சர் முஹம்மது ஷியா அல்-சூடானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்