Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த அருட்சகோதரி ஜெலான்டினா வயது 50 என்பவர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.இனந்தெரியாத நபர் ஒருவரே பஸ்ஸுக்கு கல் எறிந்ததாகவும் அந்நபரை  துரத்திச் சென்றபோது அவர் பற்றைக்காட்டிற்கு ஓடிதப்பிவிட்டதாகவும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்தப் பகுதியில் மிதிவெடி அபாயம் காணப்பட்டமையால் மேற்கொண்டு குறித்த நபரைத் துரத்தவில்லையென பயணிகள் குறிப்பிட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்