உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்களின் பட்டியலில் ரேங்கர் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை அவ்விணையத்தளம் நடத்திவருவதுடன் அதில் பலரும் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜேர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம் பெற்றுள்ளார். ஹிட்லர், இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர். சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3ஆவது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5ஆவது இடத்திலும், சீனத்து மா சே துங் 6ஆவது இடத்திலும் உள்ளனர். வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7ஆவது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8ஆவது இடைத்தைப் பிடித்துள்ளார்.  அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 10ஆவது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது இடத்தில் இருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தப் பட்டியலில் 25ஆவது இடம் கிடைத்துள்ளது.சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது. அவர் 29ஆவது இடத்தில் இருக்கிறார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி – இந்தப் பெயர் பட்டியலில்  31ஆவது இடத்தில் இருகின்றார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான  பஷில் ராஜபக்ஷ இந்த பட்டியலில் 48 ஆவது இடத்தில் இருக்கின்றார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்