உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகாளான் பச்சை பட்டாணி குழம்பு

தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 1/2
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை பட்டாணியைப் போட்டு, நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்