உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையில் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை சட்டவல்லுநர்கள் நிறைவு செய்திருப்பதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களின் விருப்புக்களை அறிந்து கொள்வதற்காக இந்த திருத்தங்களை முன்வைப்பதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் வரும் 13வது திருத்தத்தில் மீள் உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் அதில் சில புதுப்பிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த திருத்தங்களை கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தமக்கு வாக்குகளை கேட்கவுள்ளதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த ராஜபக்ச இந்த வாரம் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோரவுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்