உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesP6DITBS6சென்னையில் பாகிஸ்தான் உளவாளி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர்.சென்னையில் பாகிஸ்தான் உளவாளிகள் ஜாகீர்உசேன் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியது.ஜாகீர் உசேன் இலங்கையை சேர்ந்தவர். மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.முதலில் இந்த வழக்கை கியூ பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மேலும் ஒருவரை நேற்று இரவு கைது செய்தனர்.சென்னையில் கைது செய்யப்பட்ட அந்த உளவாளியின் பெயர் அருண் என்பதாகும். அவரும் இலங்கையை சேர்ந்தவர் தான்.அவரை இன்று வியாழக்கிழமைகோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த போவதாக தேசிய புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவரிடம் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், லேப்–டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்