உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து  மதவாச்சி – இசென்பஸ்கல பகுதியில் இன்று அதிகாலை குடைசாய்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பஸ் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்