உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


1678852846tissa%20aththanayakaஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ள நிலையில் தலைமைத்துவ சபை இல்லாது செய்யப்படவுள்ளதாகவும் அதில் உள்ள சிரேஷ்ட தலைவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு சாதனை வெற்றிபெற்ற ஹரேன் பெனாண்டோவிற்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாகவும் இது குறித்த யோசனை நாளை நடைபெறவுள்ள ஐதேக செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்