உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்un_sl_meeting_002ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.பிரதி ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க,மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்ட போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக் குழுவையும் தொடர்ந்தும் நிராகரிப்பதாக கூறியுள்ளார்.இக்கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் கணேஸ், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜெ. இம்மானுவேல், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன்,பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், ஊடக இணைப்பாளர் சுதா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கனடிய சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத் தமிழர் தொடர்பில் செயற்பட்டுவரும் தன்னார்வ நிறுவனமான அருள் தலைமையிலான பசுமைத் தாயகம் அணியினர் மற்றும் உலகின் பல பாகங்கங்களிலும் இருந்து வருகை தந்த மனித உரிமை ஆர்வலர்கள் என பலதரப் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதில் விசேட அம்சம் 27வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்த பல அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து முரண்பாடின்றி இம்முறை கூட்டத் தொடரை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்