உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அஜீத்தை வைத்து கௌதம் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் டாக்கி போர்ஷன் முடிந்தாலும் பாடல் காட்சிகள் இன்னும் மீதமுள்ளன.

படம் தீபாவளிக்கோ நவம்பரிலோ திரைக்கு வரப்போவதில்லை என்பது உறுதி. டிசம்பர் 12 லிங்கா வெளியாகிறது. அதனுடன் மோதும் எண்ணமும் கௌதமுக்கு இல்லை.
பொங்கலை குறி வைக்கும் கௌதம்
டிசம்பர் இறுதியில் அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். தயாரிப்பாளர் ரத்னத்தின் விருப்பம், 2015 பொங்கல்.

பொங்கல் என்றால் மூன்று நாள்கள் விடுமுறை வரும். ஓபனிங்கில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. 2015 பொங்கலுக்கு போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாததும் கௌதம் பொங்கலை குறி வைக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்